‘முதல்வர் மம்தாவின் நம்பிக்கையை காப்பேன்; மக்களின் குரலாக இருப்பேன்’ - வேட்பாளர் யூசுப் பதான்

யூசுப் பதான்
யூசுப் பதான்
Updated on
1 min read

கொல்கத்தா: எதிர்வரும் மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பஹரம்பூர் தொகுதியின் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பை பெற்றுள்ளார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுப் பதான். இந்நிலையில், அது குறித்து அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சி, மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிக்குமான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்தார். அதில் ஒருவராக யூசுப் பதான் இடம் பெற்றுள்ளார்.

“நான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய போது மேற்கு வங்க மாநில மக்களின் அன்பை வெகுவாக பெற்றேன். இத்தகைய சூழலில் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பை திரிணமூல் காங்கிரஸ் கட்சி எனக்கு வழங்கி உள்ளது. முதல்வர் மம்தாவின் நம்பிக்கையை நான் நிச்சயம் காப்பேன்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் என்னை சேர்த்து கொண்டமைக்கு நன்றி. மக்களின் குரலாக நாடாளுமன்றத்தில் நான் இயங்குவேன். நலிவடைந்த மக்களின் வாழ்வை மேம்படுத்துவதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமை. அதனை நான் செய்வதில் உறுதியாக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in