

உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் ரயில் மோதி பலியானார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டம் பில்குவா பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் விஜய், ஆகாஷ், சமீர், ஆரிஃப், சலீம் உள்ளிட்ட இளைஞர்கள் சிலர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றனர். அப்போது எதிர்பாராத விதமாக அப்பாதையில் வந்த ரயில் மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து ஹாபூர் காவல்துறை கண்காணிப்பாளர் ஹெம்ந்த் கூறுகையில்,
”உயிரிழந்தவர்கள் அனைவரும் 16 வயது முதல் 22 வயதுக்குட்பட்டவர்கள். இறந்தவர்கள் ரயில் நிலையம் அமைந்துள்ள பில்குவா பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். காயங்களுடன் உயிர் தப்பியவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
இந்த விபத்து குறித்து ஹாபூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்