புற்றுநோயோடு போராடி திரிபுரா அழகி ரிங்கி சக்மா 28 வயதில் உயிரிழப்பு

ரிங்கி சக்மா
ரிங்கி சக்மா
Updated on
1 min read

புதுடெல்லி: புற்றுநோயுடன் போராடி வந்த முன்னாள் திரிபுரா அழகி ரிங்கி சக்மா (28) நேற்று உயிரிழந்தார். திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரிங்கி சக்மா. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் திரிபுரா போட்டியில் பட்டம் வென்றார். இதையடுத்து அவர் இந்திய அழகிப் போட்டியில் திரிபுரா மாநிலம் சார்பில் கலந்துகொண்டார். ஆனால் பட்டம் வெல்லவில்லை. இந்நிலையில் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வந்தார் ரிங்கி.

இதனிடையே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதித்துஅறுவை சிகிச்சையும் செய்துகொண்டார். அவருக்கு மார்பகப்புற்று நோய் இருப்பது கடந்த மாதம்தான் உலகுக்குத் தெரியவந்தது. இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருவதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த மாதம் தெரிவித்தார்.

கீமோதெரபி சிகிச்சையும் அவர் பெற்று வந்தார்.இருந்தபோதும் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நடிகர், நடிகைகள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in