பாகுபலி வசூலைவிட குறைவாக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: தெலுங்குதேச எம்.பி. காட்டம்

பாகுபலி வசூலைவிட குறைவாக பட்ஜெட் நிதி ஒதுக்கீடு: தெலுங்குதேச எம்.பி. காட்டம்
Updated on
1 min read

பாகுபலி திரைப்பட வசூலைவிட குறைவாகவே ஆந்திராவுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஜெயதேவ் கல்லா தெரிவித்துள்ளார்.

பட்ஜெட்டில் ஆந்திரா மாநிலத்துக்கு அநீதி இழைத்ததாக, மத்திய அரசை கண்டித்து ஆந்திர மாநிலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடதுசாரிக் கட்சியினர் பந்த் நடத்திவருகின்றனர்.

இந்த பந்துக்கு காங்கிரஸ், ஜனசேனா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆளும் தெலுங்கு தேச கட்சியும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயதேவ் கல்லா, "இந்த பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு மத்திய அரசு ரூ.1800 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இது பாகுபலி படத்தின் ஒட்டுமொத்த வசூலைவிட குறைவானது. ஒரு படத்தயாரிப்புக்கான பட்ஜெட்டைவிட ஆந்திராவுக்கான நிதி ஒதுக்கீடு குறைவாக இருக்கிறது. தோழமைக் கட்சிகளை இப்படி நடத்தினால் எதிர்காலத்தில் கூட்டணியின் நிலை என்னவாகும்" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in