

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் 1930-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி பிறந்தவர் ஷபிகுர் ரஹ்மான் பர்க். உத்தரபிரதேச சட்டப்பேரவைக்கு 4 முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைக்கு மொராதாபாத் தொகுதியில் இருந்து 3 முறையும் சம்பல் தொகுதியில் இருந்து 2 முறையும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலுக்காக சமாஜ்வாதி கட்சி கடந்த ஜனவரி 30-ம் தேதி வெளியிட்ட முதல் வேட்பாளர் பட்டியலில் ஷபிகுர் ரஹ்மானின் பெயரும் இருந்தது. இந்நிலையில் உடல்நலக்குறைவால் நீண்ட காலம் பாதிக்கப்பட் டிருந்த அவர், மொராதாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நேற்று முன்தினம் காலமானார்.
இந்தியாவின் மிக வயதான எம்.பி.யான இவர், உ.பி.யின்சம்பல், மொராதாபாத், அம்ரோகா, பிஜ்னோர் ஆகிய மாவட்டங்களில் செல்வாக்கு பெற்ற முஸ்லிம் தலைவர் ஆவார். இவரது மறைவுக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.