பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அவமதிப்பு நோட்டீஸ்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: அலோபதிக்கு எதிரான தவறான தகவல்களுடன் விளம்பரம் வெளியிட்டு மக்களை குழப்புவதாக பதஞ்சலி நிறுவனம் மீது இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) குற்றம் சாட்டியது. இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அமனுல்லா, “தவறான விளம்பரங்களை சகித்துக் கொள்ள முடியாது’’ என்றார்.

யோகா குரு ராம்தேவ் நிறுவனத்துக்குச் சொந்தமான பதஞ்சலி ஆயுர்வேதா மற்றும் அதன் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் தங்கள் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்களுக்கு எதிரான உத்தரவை மீறியதற்காக உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in