உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இயந்திர பாலம் ராணுவத்தில் சேர்ப்பு

ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ‘மாடுலர் பிரிட்ஜ்’ வாகனம்.
ராணுவத்தில் சேர்க்கப்பட்ட ‘மாடுலர் பிரிட்ஜ்’ வாகனம்.
Updated on
1 min read

புதுடெல்லி: எல்லைப் பகுதிகள் மற்றும் போர்களப் பகுதிகளில் கால்வாய்கள், பள்ளங்கள் இவற்றை ராணுவத்தினர் மற்றும் ராணுவ வாகனங்கள் கடந்து செல்வதற்காக தற்காலிக பாலங்கள் அமைக்கும் பணியை ராணுவத்தின் இன்ஜினியரிங் பிரிவில் உள்ள வீரர்கள் மேற்கொள்வர். தற்போது இதற்குமாற்றாக இயந்திர பாலங்கள்(மாடுலர் பிரிட்ஜ்) தயாரிக்கப்பட் டுள்ளன.

இந்த இயந்திர பாலங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும், எல் அண்ட் டி நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. கனரக வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள இந்த இயந்திர பாலத்தை, எந்த பகுதிக்கும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 46 மீட்டர் நீளமுள்ள இயந்திர பாலம் ராணுவத்தில் நேற்று இணைக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி டெல்லியில் உள்ள மானெக் ஷா மையத்தில் நேற்று நடந்தது.

இந்நிகழ்ச்சியில் ராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டேமற்றும் எல் அண்ட் டி நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த இயந்திர பாலம் தயாரிப் பதற்கான ஒப்பந்தம் கடந்தாண்டு எல் அண்ட் டி நிறுவனத்துடன் செய்யப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில் 41 செட் இயந்திர பாலங்கள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

இத்திட்டத்தின் மதிப்பு ரூ.2,585 கோடி. இந்த இயந்திர பாலம், ராணுவ தளவாட தயாரிப்பில் இந்தியாவின் தற்சார்பை காட்டுவதாக உள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in