Published : 28 Feb 2024 08:38 AM
Last Updated : 28 Feb 2024 08:38 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்தது. இதனால் இந்த அமைப்பை கடந்த 2019-ம் ஆண்டு அரசு தடை செய்தது.
இந்த அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தி, தீவிரவாதம் தொடர்புடைய ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ரூ.20 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியது. இதையடுத்து ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT