

2006-ம் ஆண்டு ராணுவ ரகசியங் கள் கசிவு வழக்கில் 3 முன்னாள் கடற்படை அதிகாரிகள், விமானப் படை கமாண்டர் ஒருவர் உள்பட 5 பேர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது.
கடற்படை முன்னாள் அதிகாரி குல்புஷன் பிரஷார், கடற்படை முன்னாள் கமாண்டர் விஜேந்தர் ரானா, பதவி நீக்கப்பட்ட கடற் படை கமாண்டர் வி.கே.ஜா, விமானப்படை முன்னாள் கமாண்டர் சம்பா ஜீ எல். சர்வி, ஆயுதத் தரகரும் டெல்லி தொழில பதிபருமான அபிஷேக் வர்மா ஆகியோர் மீது குற்றச்சதி உட்பட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
குற்றச்சாட்டை மறுப்பதாக வும், விசாரணையை எதிர்கொள் வதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வர்கள் தரப்பில் கூறியதை தொடர்ந்து நீதிமன்றம் குற்றச் சாட்டுகளை பதிவு செய்தது.
இவ்வழக்கில் வரும் செப்டம்பர் 8-ம் தேதி விசாரணை தொடங் கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக குற்றங்களை பதிவுசெய்ய கடந்த 31-ம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது.