பாஜகவுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு: ராகுல், சித்தராமையா, டி.கே.சி ஆஜராக கோர்ட் நோட்டீஸ்

பாஜகவுக்கு எதிராக ஊழல் குற்றசாட்டு: ராகுல், சித்தராமையா, டி.கே.சி ஆஜராக கோர்ட் நோட்டீஸ்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக 40 சதவீத ஊழல் புகார் தெரிவித்து விளம்பரம் செய்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கர்நாடகாவில் கடந்த 2022ம் ஆண்டு ஆட்சியில் இருந்த முதல்வர் பசவராஜ் தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக ஒப்பந்ததாரர்கள் 40 சதவீத கமிஷன் புகார் தெரிவித்தனர். இதனை மையப்படுத்தி காங்கிரஸ் சார்பில் ''40 சதவீத கமிஷன் அரசு''என பாஜகவுக்கு எதிராக பத்திரிகைகளிலும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரம் செய்யப்பட்டது.

இதற்கு எதிராக கர்நாடக பாஜக செயலாளர் எஸ்.சிவபிரசாத் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.ப்ரீத் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கில் 3 பேரும் வருகிற மார்ச் 28ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

இதையடுத்து இவ்வழக்கு மார்ச் 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in