பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் நக்சல் தீவிரவாதம் 52 சதவீதம் குறைந்துள்ளது: அமைச்சர் அமித் ஷா தகவல்

பிரதமர் மோடி ஆட்சியில் நாட்டில் நக்சல் தீவிரவாதம் 52 சதவீதம் குறைந்துள்ளது: அமைச்சர் அமித் ஷா தகவல்
Updated on
1 min read

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல் மற்றும்அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:

கடந்த 2014-ம் ஆண்டு முதல்2023-ம் ஆண்டு வரை பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில்,நக்சல் தீவிரவாத சம்பவங்கள் 52 சதவீதமும், உயிரிழப்பு 69 சதவீதமும் குறைந்துள்ளன. தீவிரவாத சம்பவங்கள் 14,862-லிருந்து 7,128 ஆக குறைந்துள்ளன. உயிரிழப்புகள் 6,035-லிருந்து 1,868-ஆக குறைந்துள்ளன. பாதுகாப்பு படையினரின் உயிரிழப்பு 1,750-லிருந்து 485 ஆக குறைந்துள்ளது. அப்பாவி மக்களின் உயிரிழப்பு 4,285-லிருந்து 1,383-ஆக குறைந்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில்அமித் ஷா வெளியிட்டுள்ள தகவலில், ‘‘நக்சல் பாதிப்பு பகுதிகளில் போதிய சுகாதார மற்றும் கல்வி கட்டமைப்புகளை ஏற்படுத்தியதால் ஏழைமக்களின் இதயங்களை மோடி அரசு வென்றுள்ளது. பிரதமரின் தொலைநோக்கு கொள்கைகளுக்கு நன்றி’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in