

புதுடெல்லி: உத்தர பிரதேசத்தில் இறுதி கட்டமாக நடைபெறும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரையில் ராகுல் காந்தியுடன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். அவர்களுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரை, உத்தர பிரதேசத்தின் மொராதாபாத்தில் நேற்று மீண்டும் தொடங்கியது. இதில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் கலந்து கெண்டார். திறந்த ஜீப்பில் அமர்ந்து சென்ற ராகுல், பிரியங்காவுக்கு வழி நெடுகிலும் மக்கள் கையசைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த யாத்திரை அம்ரோஹா, சம்பல், புலந்த்சாஹர், அலிகர், ஹத்ராஸ், ஆக்ரா ஆகிய மாவட்டங்களை கடந்து பதேபூர் சிக்ரியில் இன்று நிறைவடைகிறது. உ.பி.யில் காங்கிரஸ்- சமாஜ்வாதி கட்சியிடையே மக்களவை தேர்தல்தொகுதி பங்கீடு உறுதியாகியுள்ளதையடுத்து, ஆக்ராவில் இன்று நடைபெறும் தேசிய ஒற்றுமை நியாய யாத்திரையில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்.
இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் உரையாற்றவுள்ளதால், யாத்திரை நாளை முதல் மார்ச் 1-ம் தேதி வரை நடைபெறாது. அதன்பின் மார்ச் 2-ம் தேதி ராஜஸ்தானின் தோல்பூரில் யாத்திரையை ராகுல் மீண்டும் தொடங்கி ம. பி்.யில் மொரேனா, குவாலியர், சிவ்பரி, குணா, ஷாஜாபூர் மற்றும்உஜ்ஜைன் மாவட்டங்கள் வழியாகபயணிப்பார்.