Published : 21 Feb 2018 02:28 PM
Last Updated : 21 Feb 2018 02:28 PM

பயன்பாட்டுக்கு வரும் 13 இலக்க தொலைபேசி எண்கள்

தொலைபேசி நிறுவனங்கள் விரைவில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 13 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்களை வழங்குமாறு டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.

 

தொலைபேசி பயனர்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குவதற்காக 13 இலக்க எண்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், "13 இலக்க எண்கள் வரும் ஜீன் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பிறகு அனைத்து புதிய தொலைபேசிகளுக்கும் 13 இலக்க எண்கள் ஒதுக்கீடு செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

13 இலக்க எண்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வந்தால அதிக நீளம் தொலைபேசி எண்கள் பயன்பாட்டில் உள்ள ஒரே நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு கிடைக்கும்.

இதுவரை உலக நாடுகளில் அதிகபட்சமாக சீனாவில் 11 இலக்க எண்கள் பயன்பாட்டில் உள்ளது.

இந்தநிலையில், 13 இலக்க எண்கள் பயன்பாட்டுக்கு வந்தால் அந்த எண்களை எவ்வாறு நினைவில் கொள்ள இயலும் என்ற விமர்சனங்கள் இப்போதே ஏழத் தொடங்கியுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x