Published : 07 Feb 2018 08:37 AM
Last Updated : 07 Feb 2018 08:37 AM

ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய ஜிஎஸ்டி வரி

தற்போது ஆதார் மையங்களில் முகவரி, பிறந்த தேதி, பாலினம், மின்னஞ்சல் முகவரிகளை திருத்த ரூ.25 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பயோ மெட்ரிக் தகவல்களில் திருத்தங்கள் செய்யவும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வதற்கும், சேவை என்ற பிரிவின் கீழ் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆதார் அட்டையில் சில குறிப்பிட்ட திருத்தங்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று தெரிகிறது.

அதன்படி, 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டால், இப்போது வசூலிக்கப்படும் 25 ரூபாயோடு, கூடுதலாக 4 ரூபாய் 50 காசுகள் கொடுக்க வேண்டியிருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x