பிஎஃப்ஐ உறுப்பினர்களை அரசு பயன்படுத்துகிறது: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் புகார்

பிஎஃப்ஐ உறுப்பினர்களை அரசு பயன்படுத்துகிறது: கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் புகார்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.

பல்கலைக்கழகங்களை ஆளுநர் காவிமயமாக்க முயன்று வருவதாக கூறி, அவருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பினர் (எஸ்எப்ஐ) அண்மைக்காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருவனந்தபுரத்தில் ஆளுநருக்கு எதிராக நேற்றும் கருப்புக்கொடி காட்ட முயன்றனர்.

இதையடுத்து ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறும்போது, "கொல்லம் நிலமேலியில் அண்மையில் எனக்கு எதிராக எஸ்எப்ஐ நடத்திய போராட்டம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர், தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்தவர்கள் என்று எனக்குத் தெரியவந்துள்ளது. எனக்கு எதிராக போராட்டம் நடத்த பிஎஃப்ஐ செயற்பாட்டாளர்களை அரசு பயன்படுத்துகிறது" என்றார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in