மேற்கு வங்க மாநிலத்தில் தாக்குதல் புகார்: அரசு குழந்தைகள் உரிமை குழு சந்தேஷ்காலியில் விசாரணை

மேற்கு வங்க மாநிலத்தில் தாக்குதல் புகார்: அரசு குழந்தைகள் உரிமை குழு சந்தேஷ்காலியில் விசாரணை
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்குவங்கத்தின் வடக்கு 24பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பழங்குடியின பெண்களை, ஆளும்திரிணமூல் கட்சியினர் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதை கண்டித்து போராட்டம் வலுப்பெற்றதால், பெண்களுக்கான தேசிய, ஆணையம் எஸ்.சி. தேசிய ஆணையத்தின் பிரதிநிதிகள் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் 7 மாத குழந்தை ஒன்று, தாயின் மடியில் இருந்து தூக்கி வீசப்பட்டதாகவும், இதில் காயம் அடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த மேற்கு வங்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த 6 பேர் நேற்று சந்தேஷ்காலி கிராமத்துக்கு சென்றனர்.

மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு ஆலோசகர் சுதேஷ்னா ராய் கூறுகையில், ‘‘குழந்தை மீதான தாக்குதல் புகார் குறித்து விசாரிக்க நாங்கள் சந்தேஷ்காலி வந்துள்ளோம். சிகிச்சை பெறும் குழந்தையின் தாயிடம் நாங்கள் பேசவுள்ளோம்’’ என்றார்.

மேற்குவங்க குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் துலிகா தாஸ் கூறுகையில், ‘‘பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயை நாங்கள் சந்தித்தோம்.அவர்கள் கேட்டுக்கொண்டபடி மருத்துவ உதவி, பாதுகாப்பு வழங்கியுள்ளோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in