Published : 17 Feb 2024 06:55 AM
Last Updated : 17 Feb 2024 06:55 AM

மகாராஷ்டிர முதல்வருடன் லண்டன் லார்டு மேயர் மைக்கேல் சந்திப்பு

மும்பை: லண்டன் லார்டு மேயர் மைக்கேல் மைனெல்லி நேற்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை மும்பையில் சந்தித்துப் பேசினார்.

செயற்கை நுண்ணறிவு, சுத்தமான காற்று, சுற்றுச்சூழல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனர். லண்டனில் உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மையத்திற்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயரை சூட்டவிருப்பதாக மைக்கேல்மைனெல்லி கூறினார்.

இதற்கு வரவேற்பு தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே, லண்டனில் சத்ரபதி சிவாஜி சிலையையும் நிறுவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். இங்கிலாந்தில் கிரேட்டர் லண்டன் முழுவதும் அதிகார வரம்பு கொண்டவரை மேயர் என்றும் லண்டன் நகரத்தின் மீது மட்டும் அதிகார வரம்பைக் கொண்டவரை லார்டு மேயர் எனவும் அழைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x