Published : 24 Feb 2018 11:17 AM
Last Updated : 24 Feb 2018 11:17 AM

இன்னொரு வங்கி மோசடி அம்பலம்: ரூ. 389 கோடி மோசடி செய்த மற்றொரு நகைகடை அதிபர்

பஞ்சாப் நேஷனல் வங்கியில், நகை வியாரபாரி நிரவ் மோடி, மோசடி பண பரிவர்த்தனை செய்து 11,500 கோடி ரூபாய் மோசடி செய்த புகார் உலுக்கி வரும் நிலையில், இதே போன்ற மோசடி நடந்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நாட்டின் இரண்டாவது பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி மோசடி நடந்ததது சமீபத்தில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வைரம் மற்றும் தங்க நகை வர்த்தகர் நிரவ் மோடி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அவரது சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பஞ்சாப் நேஷனல் வங்கி பெரும் நஷ்டத்திற்கும், நெருக்கடிக்கும் ஆளாகியுள்ளது.

இந்நிலையில் டெல்லியைச் சேர்ந்த தங்க மற்றும் வைர நகை வியாபாரியான துவாரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம், ஒரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் என்ற பொதுத்துறை வங்கியில் 389.85 கோடி ரூபாய் மோசடி செய்துள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது. நிரவ் மோடி செய்ததை போலவே வைர மற்றும் தங்க நகையை ஏற்றுமதி செய்தற்கு தவறான முறையில் லெட்டர் ஆப் கிரெடிட் எனப்படும் போலியான ஆவணங்களை தந்து மோசடியாக பண பரிமாற்றம் செய்துள்ளது.

இதுதொடர்பாக வங்கி அளித்துள்ள புகாரின் பேரில் துவரகா தாஸ் சேத் இண்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களான சபயா சேத், ரீட்டா சேத், கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. கடந்த 2007 முதல் 2012ம் ஆண்டு வரை இந்த மோசடி நடந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x