

புதுடெல்லி: உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ராஜீவ் சந்திர சேகர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், மீன் வளத் துறை அமைச்சர் புருசோத்தம் ரூபலா, குறு, சிறு, நடுத்தர துறை அமைச்சர் நாராயண் ராணே, வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் ஆகிய 7 அமைச்சர்கள் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட பாஜக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை.
இதுகுறித்து பாஜக வட்டாரங்கள் கூறும்போது, "வரும் மக்களவைத் தேர்தலில் 7 அமைச்சர்களும் போட்டியிடக் கூடும்" என்று தெரிவித்தன.