Published : 16 Feb 2024 07:47 AM
Last Updated : 16 Feb 2024 07:47 AM
டேராடூன்: உத்தராகண்ட் மாநிலம் ஹல்திவானி நகரின் வன்புல்புரா பகுதியில் கடந்த 8-ம் தேதி ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. அப்போது சட்டவிரோதமாக கட்டப்பட்ட மதரஸா இடிக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் – போலீஸார் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து ஹல்திவானியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வன்புல்புராவில் 7நாட்களுக்கு பிறகு நேற்று 3 இடங்களில் காலை 9 மணி முதல் 4மணி வரையும் மற்ற இடங்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT