மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் சோனியா: காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல்

மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் சோனியா: காங்கிரஸின் முதல் வேட்பாளர் பட்டியல்
Updated on
1 min read

உத்தர பிரதேசம் உட்பட 15 மாநிலங்களைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு மனுத்தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.

அதில் சோனியா காந்தி, டாக்டர். அகிலேஷ் பிரசாத் சிங், அபிஷேக் மானு சிங்வி, சந்திரகாந்த் ஹண்டோர், அஜய்மாகென், டாக்டர் சயீத் நசீர் உசேன், சந்திரசேகரன், அசோக் சிங், ரேணுகா சவுத்திரி மற்றும் அனில் குமார் யாதவ் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

வழக்கமாக உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படும் சோனியா காந்தி, இந்த முறை ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். பிஹார் காங்கிரஸ் தலைவராக இருக்கும் அகிலேஷ் பிரசாத் சிங் பிஹார்மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்படுகிறார்.

அபிஷேக் மானு சிங்வி இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து தேர்வு செய்யப்படவுள்ளார். மகாராஷ்டிரா காங்கிரஸ் செயல் தலைவர் சந்திரகாந்த் ஹண்டோர் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வாகிறார். அஜய் மாகென், டாக்டர் சயீத் நாசர் உசேன், சந்திரசேகர் ஆகியோர் கர்நாடகாவிலிருந்தும், அசோக் சிங் மத்திய பிரதேதசத்தில் இருந்தும், ரேணுகா சவுத்திரி மற்றும் அனில் குமார் யாதவ் ஆகியோர் தெலங்கானாவில் இருந்தும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in