

புதுடெல்லி: குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ட்ரோன்களை பயன்படுத்தி கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதை முறியடிக்க விவசாயிகள் புதிய உத்தியை கையில் எடுத்துள்ளனர். அதன்படி, அதுபோன்ற கண்ணீர் புகை குண்டு ட்ரோன்களை சமாளிக்க விவசாயிகள் பட்டங்களை பறக்க விடுகின்றனர்.
பட்டங்களின் நீண்ட கயிற்றில் ட்ரோன்களை சிக்க வைக்க அவர்கள் முயற்சிக்கின்றனர். இதன் மூலம், ட்ரோன்களை கீழே விழச் செய்து அவற்றை செயலிழக்க செய்யும் நுட்பமான முயற்சியை விவசாயிகள் கையில் எடுத்துள்ளனர்.