Published : 15 Feb 2024 06:13 AM
Last Updated : 15 Feb 2024 06:13 AM
புதுடெல்லி: கடற்படை உணவகங்களில் அதிகாரிகள் குர்தா - பைஜாமா அணிய இந்திய கடற்படை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, கடற்படை உணவகங்களில் ஆண் அதிகாரிகள் குர்தா - பைஜாமா அணிந்து வரலாம். அதேபோல் பெண் அதிகாரிகள் குர்தா - சுடிதார் அல்லது குர்தா - பலாசோ அணிந்து வரலாம்.
இதுவரையில், கடற்படை உணவகங்களில் குர்தா - பைஜாமா அணிய அனுமதி கிடையாது. அதற்கான சீருடைஅணிந்தே வர வேண்டும். இந்நிலையில், காலனிய சட்டங்களிலிருந்தும் மனநிலையில் இருந்தும் விடுபட வேண்டும் என்ற நோக்கில் தற்போது கடற்படை உணவகங்களில் குர்தா -பைஜாமா அணிந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடற்படை தளபதி அட்மிரல் ஹரி குமார் தலைமையில் நடைபெற்ற கடற்படை கமாண்டோக்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிபந்தனை: குர்தா - பைஜாமா மீது கைஇல்லாத மேல் சட்டை அணிய வேண்டும், முறையான ஷு அல்லது செருப்பு அணிய வேண்டும் என்பன உட்பட குர்தாவின் நிறம் சார்ந்தும் அதன் வடிவமைப்பு சார்ந்தும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீர்மூழ்கிக் கப்பல்: அதேசமயம், குர்தா - பைஜாமாவை பணிநிமித்தம் இல்லாத கூடுகைகளுக்கு மட்டுமே அணிய வேண்டும் என்றும்,போர்க் கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களில் இந்த ஆடைகளுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT