இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி

இன்னும் இந்தியாவில்தான் இருக்கிறார் ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி
Updated on
1 min read

ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ.800 கோடி ரூபாய்க்கும் மேல் கடன்பெற்றுவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் அவர் இன்னும் இந்தியாவில்தான் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

கான்பூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஜாக்ரான் க்ரூப் உரிமையாலர் சஞ்சீவ் குப்தாவின் மகள் திருமண விழாவில் விக்ரம் கோத்தாரி கலந்து கொண்டுள்ளார். அவரது புகைப்படமும் வெளியாகியுள்ளது. எனவே, அவர் இந்தியாவில் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

ரூ.800 கோடி கடன்..

ரோட்டோமேக் பேனா நிறுவன உரிமையாளர் விக்ரம் கோத்தாரி ஐந்து பொதுத்துறை வங்கிகளிலிருந்து ரூ800 கோடிக்கும் மேல் கடன் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. அலகாபாத் வங்கி, பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் இவருக்கு கடன் வழங்கி இருக்கின்றன. தங்களது விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்து இவருக்கு கடன் வழங்கியதாகவும் தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in