`ஹுக்கா’ பார்லர்களுக்கு தெலங்கானாவில் தடை

`ஹுக்கா’ பார்லர்களுக்கு தெலங்கானாவில் தடை
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா முழுவதும் ‘ஹுக்கா பார்லர்’களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தெலங்கானா மாநில சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் மீது ஆளும்கட்சி மற்றும்எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே இக்கூட்டத்தில் சில மசோதாக்களுக்கும் பேரவைஒப்புதல் அளித்தது. இந்நிலையில், நேற்று முதல்வர் ரேவந்த் ரெட்டிசார்பில் தெலங்கானா மாநிலம்முழுவதும் ‘ஹுக்கா பார்லர்’களுக்கு தடை விதிக்கும் மசோதாவை பேரவை விவகாரத்துறை அமைச்சர் டி. தர் ரெட்டி தாக்கல் செய்தார்.

இதனை பேரவை எந்தவித விவாதங்களும் நடத்தாமலேயே ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. அப்போது அமைச்சர் டி.ஸ்ரீதர்ரெட்டி பேசுகையில், ‘‘ஹுக்கா பிடிப்பது சிகரெட்டை விட மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தெலங்கானாவில் ஹுக்காபார்லர்கள் ஏராளமாக முளைத்துள்ளன. இதனால் இளைஞர்கள், குறிப்பாக கல்லூரி மாணவர்கள் ஹுக்காவுக்கு அடிமையாகி வருகின்றனர். இந்த புகையை, பழக்கமே இல்லாதவர்கள் சுவாசிக்கும்போது அவர்களும் பாதிக்கப்படுகின்றனர். இதன் மூலம் புற்றுநோய் போன்றவை விரைவாக பரவும் அபாயமும் உள்ளதால் மாநிலம் முழுவதும் ஹுக்கா பார்லர்களை தடை செய்கிறோம்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in