Published : 13 Feb 2024 07:07 AM
Last Updated : 13 Feb 2024 07:07 AM

பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட கர்ப்பூரி தாக்குர் குடும்பத்தார் பிரதமருடன் சந்திப்பு

பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்த கர்ப்பூரி தாக்குர் குடும்பத்தார்.

புதுடெல்லி: பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குர் குடும்பத்தார், பிரதமர் மோடியை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

குடியரசு தினத்தையொட்டி பிஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்குருக்கு, அவரது மறைவுக்குப் பிறகு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியை, கர்ப்பூரி தாக்குர் குடும்பத்தார் நேற்று பிரதமரின் இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

கர்ப்பூரி தாக்குரின் மகனும், ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவருமான ராம்நாத் தாக்குர் தலைமையில் கர்ப்பூரி தாக்குர் குடும்பத்தார் நேற்று டெல்லி வந்தனர். டெல்லியிலுள்ள பிரதமரின் இல்லமான லோக் கல்யாண் மார்க்கில் பிரதமர் மோடியை, கர்ப்பூரி தாக்குரின் குடும்பத்தார் சந்தித்து பேசினர். அப்போது கர்ப்பூரி தாக்குருக்கு பாரத ரத்னா விருது அறிவித்ததற்கு அவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறும்போது, “பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள ஜனங்களின் நாயகன் கர்ப்பூரி தாக்குர்குடும்பத்தாரை சந்தித்துப் பேசியதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சமூகத்தில் பிற்படுத்தப்பட்டவர் மற்றும் வறுமை நிலையில் உள்ளவர்களுக்காக பாடுபட்டவர் கர்ப்பூரிதாக்குர். அவரது வாழ்க்கையும், கொள்கைகளும் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து ஊக்கம் அளிக்கும்’’ என்றார்.

இதுகுறித்து ராம்நாத் தாக்குர் கூறும்போது, “மறைந்த எனது தந்தை கர்ப்பூரி தாக்குருக்கு பாரதரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி. இதற்காகபிஹார் மாநில மக்களின் சார்பாகவும், தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்களின் சார்பாகவும், எங்கள் குடும்பத்தின் சார்பாகவும் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார்.

பிரதமருடனான சந்திப்பின்போது கர்ப்பூரி தாக்குரின் பேரன்ரஞ்சித் குமார் உள்ளிட்டோர்உடன் இருந்தனர். ஜனங்களின் நாயகன் என்று வர்ணிக்கப்படும் கர்ப்பூரி தாக்குர், பிஹார் மாநில முதல்வராக 1970 முதல் 1971 வரையும், 1977 முதல் 1979 வரையும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x