Last Updated : 06 Feb, 2018 05:40 PM

 

Published : 06 Feb 2018 05:40 PM
Last Updated : 06 Feb 2018 05:40 PM

அக்னி I விண்ணில் பாய்ந்தது: அணு ஆயுதம் தாங்கிச்செல்லும் திறன்கொண்ட ஏவுகணை சோதனையில் வெற்றி

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி I ஏவுகணையின் விண்ணில் பறக்கும் சோதனையை இந்தியா இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்தியது.

இந்த ஏவுகணை அணுஆயத வெடிபொருட்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்டது. இது பயனாளியின் தரப்பு சோதனையின் ஒரு பகுதியாக ஒடிசா கடற்கரையிலிருந்து இந்திய ராணுவத்தினரால் ஏவப்பட்டது.

பலாசோரில் உள்ள அப்துல் கலாம் தீவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த டெஸ்ட் ரேஞ்சின் பேட் -4ல் இருந்து 700 கிலோ மீட்டர் தொலைவிற்கான இந்த பயனாளி ஏவுகணைச் சோதனையை இந்திய இராணுவப் படைகள் நடத்தியது.

இது அக்னி -1 இன் 18 வது பதிப்பாகும், இது குறிப்பிட்ட நேர அளவுக்குள் அனைத்து அளவுகோல்களையும் அடைந்துவிடும் என்றும் இந்த ஏவுகணை 2004ல் சேவையில் இணைக்கப்பட்டது என்றும் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

திடமான தூண்டுதலால் இயக்கப்படும் நிலத்திலிருந்து நிலத்தை நோக்கி தாக்கும் ஒற்றை நிலை ஏவுகணை ஒன்று இராணுவப் படைகளின் வழக்கமான பயிற்சி செய்முறையின் ஒரு பகுதியாக நிகழ்த்தப்பட்டது.

தாக்குதலுக்கு இராணுவம் எப்போதும் தயாராக இருப்பதை உறுதி செய்யும்விதமாக இந்த சோதனை குறுகிய கால அவகாசத்தில் பரிசோதித்து மீண்டும்மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டது.

இந்த ஏவுகணை சிறப்பு ஊடுருவும் வல்லமை கொண்டது. அது தன் இலக்கை துல்லியமாக அடையும்விதமான உயர் வகை துல்லியத்தரம் கொண்டது. இதன் இலக்கின் எல்லை குறித்த துல்லியத்தின் அடிப்படையில் அதன் சிறந்த செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

15 மீட்டர் நீளமுள்ள அக்னி -1, 12 டன்கள் எடையுள்ளதாக, 1,000 கிலோ வரை அணுஆயுதங்களை எடுத்துச்செல்லக்கூடியது. இதன் கடந்த சோதனை நவம்பர் 22, 2016 அன்று இதே தளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x