

புதுடெல்லி: மத்திய டெல்லி மற்றும் டெல்லி யின் கிழக்கு பகுதிகளை இணைக் கும் வகையில் 1.3 கி.மீ நீளத் துக்கு ரூ.777 கோடி செலவில் உருவாக்கப்பட்ட பிரகதி மைதான சுரங்கப் பாதை திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எல் அண்ட் டி நிறுவனத்தால்கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதையில் மழை பெய்தால் வெள்ள நீர் தேங்குகிறது. தற்போது சுரங்கப் பாதையின் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதை பழுதுபார்க்க முடியாது, முழு அளவில் சீரமைக்க வேண்டும் என டெல்லி பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக எல் அண்ட் டிநிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து எக்ஸ் தளத்தில் கிண்டல் செய்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘‘சுதந்திர இந்தியாவின் 75-ம் ஆண்டில் ஊழல் தொடர்கிறது. ரூ.777 கோடி செலவில் கட்டப்பட்ட பிரகதி மைதான சுரங்கப் பாதை, ஒரே ஆண்டில் போக்குவரத்துக்கு பயனற்றதாகிவிட்டது. வளர்ச்சி பணிகளை திட்டமிடுவதற்கு பதில்பிரதமர் ‘மாடலிங்’ செய்து கொண்டிருக்கிறார். அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித்துறை எல்லாம் ஊழலை எதிர்த்து போராடாமல் ஜனநாயகத்தை எதிர்த்து போராடுகின்றன’’ என்றார்.