

லக்னோ: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித், சோனியா காந்தி - ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கலகக்குரல் கொடுத்தவர். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வசித்து வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி லூயிஸ் குர்ஷித் மீது, அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் அமைந்துள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றம் கைது வாரண்ட்டை 2 நாட்களுக்கு முன்பு பிறப்பித்தது.
இதனிடையே சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில்லூயிஸ் குர்ஷித், லக்னோவிலுள்ள அமலாக்கத்துறை மண்டல அலுவலகத்தில் வரும்15-ம் தேதி ஆஜராக வேண்டும்என்று நேற்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 2009-10-ல் லூயிஸ்குர்ஷித் தலைமையிலான டாக்டர் ஜாகிர்ஹுசைன் நினைவு அறக்கட்டளையானது, செயற்கைக் கால்கள் மற்றும் செயற்கைக்கால்களுக்கான கருவிகளை விநியோகம் செய்தது. அதில் அரசு நிதியை முறைகேடாக லூயிஸ் குர்ஷித் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக 2017-ல் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில்தான் தற் போது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.