ரூ.2.75 லட்சம் கோடியில் தெலங்கானா இடைக்கால பட்ஜெட் தாக்கல்

ரூ.2.75 லட்சம் கோடியில் தெலங்கானா இடைக்கால பட்ஜெட் தாக்கல்
Updated on
1 min read

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் முதன் முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மாநிலத்தின் முதல்வராக ரேவந்த் ரெட்டிபணியாற்றி வருகிறார். இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினர்.

அதன் பின்னர், நேற்று அவை கூடியதும், அம்மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான பட்டி விக்ரமார்க்கா ரூ. 2,75,891 கோடியில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில் காங்கிரஸ் கட்சி தேர்தலின்போது கொடுத்த 6 வாக்குறுதி திட்டங்களை அமல் படுத்த ரூ. 53,196 கோடியும், விவசாய மேம்பாட்டுக்கு ரூ. 19,746 கோடியும், பஞ்சாயத்து மற்றும் கிராம வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ. 40,080 கோடியும், நீர்ப்பாசன துறைக்கு ரூ. 28,024 கோடியும், தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ. 774 கோடியும், நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு ரூ. 11,692 கோடியும், கல்வித்துறைக்கு ரூ. 21,389 கோடியும், மூசி நதி சுத்திகரிப்புக்கு ரூ. 1000 கோடியும் என மொத்தம் ரூ. 2.75 லட்சம் கோடிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், விரைவில் மாநிலத்தில் 15 ஆயிரம் போலீஸார் பணி நியமனம் செய்யப்படுவர் என்றும், ஆசிரியர் தேர்வு நடத்தப்படும் என்றும், விரைவில் ரூ. 500-க்கு சமையல் காஸ் சிலிண்டர் விநியோகம் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in