ராம்நாத்தை சந்தித்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு

ராம்நாத்தை சந்தித்து ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆம் ஆத்மி எதிர்ப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தர முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சிறப்புக் குழு அமைக்கட்டுள்ளது. இந்தக் குழு மக்களவை மற்றும்மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது.

இதுதொடர்பாக இக்குழுவினர் ஆய்வுகள், ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவந்தனர். மேலும், கட்சித் தலைவர்களிடம் கருத்துக் கேட்புகள், பொது மக்களிடமிருந்து ஆலோசனைகளை குழு பெற்று வந்தது. இந்நிலையில் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் நேற்று முன்தினம், குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தனர்.

ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர்கள் ஜாஸ்மின் ஷா, பங்கஜ் குப்தா ஆகியோர், ராம்நாத் கோவிந்தை சந்தித்து மனு அளித்தருந்தனர். இதுதொடர்பாக ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்துள்ளோம்.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத் தப்படும்போது அது வாக்காளர்களின் பொறுப்புகளை நீர்த்துப்போகச் செய்யும். குறுகிய நிதிஆதாயங்களுக்காக அல்லது நிர்வாக வசதிக்காக அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் கோட்பாடுகளை தியாகம் செய்ய முடியாது. இவ்வாறு ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஜாஸ்மின் எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in