சுரபி வாணிதேவி
சுரபி வாணிதேவி

நரசிம்மராவின் மகள் சுரபி பிரதமர் மோடிக்கு புகழாரம்

Published on

ஹைதராபாத்: முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவரது மகளும் பிஆர்எஸ் கட்சி மேலவை உறுப்பினருமான சுரபி வாணிதேவி, நேற்று கூறியதாவது:

எனது தந்தைக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பிரதமராக பதவி ஏற்றபோது, நமது நாடுஇக்கட்டான சூழலில் இருந்தது. அதிலிருந்து மீட்டவர் எனது தந்தை. ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு இருக்கும் என்பதை அவர் நிரூபித்து காட்டினார். எவ்வித பயமோ, காழ்ப்புணர்வோ இன்றி, மக்கள் நலனே தனது சேவையாக வாழ்ந்து காட்டினார்.

நாட்டின் மிக உயரிய விருதானபாரத ரத்னா அவருக்கு கிடைத்திருப்பதை தெலங்கானா மக்கள் கொண்டாடுகிறார்கள். பிஆர் எஸ் ஆட்சியில், கடந்த 2021-ம் ஆண்டு, நரசிம்மராவின் நூற்றாண்டு விழா ஆண்டு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. கட்சி பாகுபாடு பார்க்காமல் எனதுதந்தைக்கு உயரிய விருதினை அறிவித்ததன் மூலம் பிரதமர் மோடி தனது உயரிய பண்பை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு சுரபி வாணி தேவி தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in