“பிரதமர் மோடி ஓபிசி பிரிவை சேர்ந்தவர் அல்ல” - ராகுல் குற்றச்சாட்டு

ஒடிசாவில் நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாகனத்தில் நின்றபடி மக்களிடம் உரையாற்றினார்.
ஒடிசாவில் நேற்று பாரத் நியாய யாத்திரை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வாகனத்தில் நின்றபடி மக்களிடம் உரையாற்றினார்.
Updated on
1 min read

பிரதமர் மோடி பொதுப் பிரிவை சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் தான் ஓபிசி என மக்களை தவறாக வழிநடத்துகிறார் என ஒடிசாவில் நேற்று நடைபெற்ற பாரத நியாய யாத்திரையில் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஒடிசா மாநிலத்தில் தனது 3 நாள் பாரத நியாய யாத்திரையை நிறைவு செய்தார். அப்போது ஜர்சுகுடா என்ற இடத்தில் கூடியிருந்த மக்களிடம் அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தான் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் என மக்களை தவறாக வழிநடத்துகிறார்.

அவர் குஜராத்தில் தேலி என்ற பிரிவைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். இந்தப் பிரிவு கடந்த 2000-ம் ஆண்டு பாஜ அரசு ஆட்சி காலத்தில்தான் ஓபிசி பட்டியலில் சேர்க்கப்பட்டது. அதனால் பிறக்கும்போது மோடி ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர் அல்ல. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in