Published : 13 Feb 2018 04:52 PM
Last Updated : 13 Feb 2018 04:52 PM

காதலர் தினம் பற்றி இந்தியர்கள் என்ன நினைக்கிறார்கள்?- ஆய்வில் சுவாரஸ்ய தகவல்கள்

பெரும்பாலான இந்தியர்கள் காதலர் தினத்தை பற்றி அதிகம் கவலைப்பட வில்லை எனவும், வழக்கமான ஒரு நாளாகவே எண்ணுவதாகவும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் பல்வேறு நாடுகளில் கொண்டாடப்படுகிறது. காதலர்களால் மட்டுமின்றி, அன்பை பறிமாறிக் கொள்ளும் நாளாக பலர் இதனை மகிழ்ச்சியுடன் கொண்டாடடுகின்றனர். ஆனால், காதலர் தினத்திற்கு எதிராக போராட்டங்களும் நடைபெறுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் காதலர் தினம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள பிரபல திருமண தகவல் இணையதளமான ஷாதி டாட் காம் கருதது கணிப்பை நடத்தியது. நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த 8,200 பேரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. திருணம் ஆன, திருமணம் ஆகாத 20 -35 வயது கொண்ட, ஆண், பெண் இருபாலரிடமும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீங்கள் மிகவும் விரும்பும் நாள் எது? என்ற கேள்விக்கு 61 சதவீதம் பேர் தங்கள் பிறந்தநாள் எனக்கூறியுள்ளனர். 36 சதவீதம் பேர் புத்தாண்டு என கருத்து தெரிவித்துள்ளனர். 3 சதவீதம் பேர் மட்டுமே காதலர் தினம் எனக் கூறியுள்ளனர்.

காதலர் தின கொண்டாட்டத்தில் நம்பிக்கை உள்ளதா? என கேட்டதற்கு 68 சதவீதம் பேர் இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 32 சதவீதம் பேர் ஆம் என கூறியுள்ளனர்.

இதை தவிர காதலர் தினத்தை நீங்கள் ஏன் கொண்டாடுவதில்லை? என்ற கேள்விக்கு, 55 சதவீதம் பேர், அது அதீதமாக சித்திரக்கப்படுவதாக கூறியுள்ளனர். எல்லா நாளும் காதலர் தினம் தான் பிறகு தனியாக ஒருநாள் ஏன்? என 28 சதவீதம் பேர் கூறியுள்ளனர். தேவையற்ற விளம்பரங்களால் அதன் மவுசு குறைந்து விட்டதாக 17 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். காதலர் தினத்தை வழக்கமான ஒரு நாளாக தான் கருதுவீர்களா? என்ற கேள்விக்கு ஆம் என 67 சதவீதம் பேரும், இல்லை என 33 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக காதலர் தினம் என்பது கொண்டாட்டம் என்பதையும் கடந்து வர்த்தக நோக்கத்திற்கு அதகிம் பயன்படுத்தப்படுவதால் அதன் மீதான ஈர்ப்பு மக்களிடம் குறைந்து வருவதாக அந்த இணையதளம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x