Last Updated : 27 Feb, 2018 03:32 PM

 

Published : 27 Feb 2018 03:32 PM
Last Updated : 27 Feb 2018 03:32 PM

நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார்: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் எந்தவிதமான சதியும் இல்லை என்று துபாய் தடயவியல் துறை கூறியுள்ள நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணிய சுவாமி நடிகை ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டுள்ளார் என்று கூறி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

துபாய்க்கு திருமண நிகழ்ச்சிக்காக சென்ற நடிகை ஸ்ரீதேவி, அங்கு மாரடைப்பால் மரணமடைந்தார் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன்பின் தடவியல்துறை, உடற்கூறு ஆய்வு அறிக்கையில், ஸ்ரீதேவி மது அருந்தியதால், ஹோட்டல் அறையின் குளியல் தொட்டியில் விழுந்து மரணமடைந்தார் என கூறப்பட்டது. அவரின் சாவில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை எனக் கூறி அவரின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் போலீசார் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி ஸ்ரீதேவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவர் கொலைசெய்யப்பட்டார் என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி டெல்லியில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

நடிகை ஸ்ரீதேவி இயல்பாக இறக்கவில்லை, அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பிரபல தாதா தாவுத் இப்ராஹிமுக்கும், நடிகைகளுக்கும் இடையே தொடர்பு இருந்தது என்பதற்கு முக்கியத்துவம் அளித்து இப்போது இதை ஆராய வேண்டும்.

நடிகை ஸ்ரீதேவியைப் பொறுத்தவரை மது அருந்துபவர் கிடையாது, அவர் ஒயின் போன்றவற்றை மட்டும் விருந்துகளின்போது மட்டுமே சாப்பிடக்கூடியவர். அப்படி இருக்கும்போது, சுயநினைவு அற்றுப்போகும் வரை எப்படி மது அருந்தி இருப்பார்?, ஸ்ரீதேவி வலுக்கட்டாயமாக மது குடிக்க வைக்கப்பட்டாரா என்ற கேள்வி எழுகிறது. ஹோட்டல் அறையில் இருந்த கண்காணிப்பு கேமிராக்கள், ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் ஆய்வுசெய்யப்பட்டனவா? என்ற கேள்வியும் எழுகிறது.

ஸ்ரீதேவி மாரடைப்பால் இறந்துவிட்டார் என திடீரென ஊடகத்திடம் அறிவித்தார்கள், அப்படி என்றால், இவை எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதா?

என்னைப் பொருத்தவரை, ஸ்ரீதேவி மரணம் குறித்து என்னிடம் கேட்டால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்றே கூறுவேன்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x