

ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கவும்,அரசியல் செல்வாக்கை குறைக்கவுமே தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்தனர் என சசிகலா வின் வழக்கறிஞர் மணிசங்கர் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா,சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணை, பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னி லையில் புதன்கிழமை நடை பெற்றது.
அப்போது இவ்வழக்கில் 2-ம் குற்றவாளியாக குற்றம் சாட்டப் பட்டுள்ள சசிகலாவின் வழக்கறிஞர் மணிசங்கர், 7-வது நாளாக தொடர்ந்து இறுதி வாதம் செய்தார்.
அவர் வாதிட்டதாவது:
‘இவ்வழக்கில் குற்றவாளிகளாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சசிகலா வழக்கு காலத்திற்கு முன் பாகவே பல்வேறு தனியார் நிறு வனங்களைத் தொடங்கி அதன் இயக்குநராகவும் பங்குதாரராரக வும் இருந்தார்.அந்த நிறுவனங்க ளின் மூலம் கிடைத்த வருமானத்தை யும்,தனது சொந்த வருமானத் தையும் கொண்டு முதலீடு மற் றும் பணப்பரிவர்த்தனைகளில் ஈடுபட்டார்.
சசிகலா பங்குதாரராக இருந்த 32 தனியார் நிறுவனங்களில் ஜெயா பிரிண்ட்டர்ஸ் மற்றும் சசி எண்டர்பிரைசஸ் ஆகிய இரு நிறுவனங்களில் மட்டுமே ஜெய லலிதா பங்குதாரரராக இருந்தார். மற்ற நிறுவனங்களில் சசிகலா மட்டுமே பங்குதாரர். இந்த நிறுவனங்கள் தொடர்பாக நடைபெற்ற அனைத்து பண பரிவர்த்தனைகளிலும் சசிகலா தனது சொந்த பணத்தையும், வங்கி மூலம் கடனாக பெற்ற பணத் தையுமே முதலீடு செய்தார்.
ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வ ராக இருந்த ஜெயலலிதாவின் பணத்தை தனது நிறுவனங்களில் முதலீடு செய்தார் என குற்றப் பத்திரிக்கையில் கூறியுள்ளனர்.
அதற்கான எவ்வித ஆதாரங் களையும் நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்து நிரூபிக்கவில்லை.
கங்கை அமரனின் சாட்சியம்
இதே போல சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக இருக்கும் இசையமைப்பாளர் கங்கை அமரன் அளித்துள்ள வாக்குமூலத்தில், அவருடைய பையனூர் பண்ணை வீட்டை சசிகலாவிற்கு விற்றது தொடர்பாக கூறுகையில், சசிகலா தன்னை மிரட்டவில்லை, தனது சொந்த விருப்பத்தின்பேரால் விற்றதாக கூறியுள்ளார். அதுமட்டு மில்லாமல் தனது மனைவி மற்றும் நண்பர்கள் பெயரில் இருந்த நிலத்தையும் அவர்களுடைய விருப் பத்தின் பேரிலே விற்றதாக தெரிவித்துள்ளார். இந்த வாக்கு மூலத்தின் மூலம் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் சசிகலா மிரட்டி நிலம் வாங்கியதாக கூறியிருப்பது பொய்யென நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரசியல் காழ்ப்புணர்ச்சி
மேலும் சசிகலா தனது தனியார் நிறுவனங்களுக்கு நாகை மாவட்ட சார்பதிவாளர் ராகவேலுவை மிரட்டி நிலத்தை பதிவு செய்ததாக குற்றப்பத்திரிகையில் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறியுள்ளனர். ஆனால் குறுக்கு விசாரணையில் ராகவேலு, ‘நிலம் பதிவானதாக சொல்லப்படும் நாளில் தான் விடுமுறையில் இருந்ததாக' ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
சசிகலாவின் சொத்துமதிப்பை அதிகப்படுத்தியும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளையும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் திட்டமிட்டே குற்றப்பத்திரிக்கையில் பதிவு செய்துள்ளனர். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் விளைவிக்க வும், அரசியல் செல்வாக்கை குறைக் கவுமே இவ்வழக்கு தொடரப் பட்டது'' என்றார்.
வழக்கறிஞர் மணிசங்கரின் இறுதி வாதம் வியாழக்கிழமையும் தொடரவுள்ளது.