

மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி ஒருவர் தவறி விழ அவரை நடைமேடையில் நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் காப்பாற்றிய வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கல்யாண் ரயில் நிலையம். எப்போதுமே மிகவும் பரபரப்பாக இருக்கும் இந்த ரயில் நிலையத்தில் புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டு வேகமெடுத்த சில நொடிகளில் ஓடிவந்த பயணி ஒருவர் அந்த ரயிலில் ஏற முயன்றார். அப்போது அவர் கீழே தவறி விழுந்தார். சில விநாடிகளில் அவர் ரயிலுக்கு அடியில் சென்று நசுங்கியிருக்கக்கூடும். ஆனால், அங்கு நின்றிருந்த டிக்கெட் பரிசோதகர் ஒருவர் லாவகமாக அந்தப் பயணியை ரயிலில் சிக்கவிடாமல் இழுத்துக் காப்பாற்றினார்.
நடைமேடையில் காத்திருந்தவர்கள் பலர் இச்சம்பவத்தைப் பார்த்து டிக்கெட் பரிசோதகர் சசிகாந்த் சவானை வெகுவாகப் பாராட்டினர்.