அனுமதியின்றி நீண்டகால விடுப்பு: 13,521 ரயில்வே ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு

அனுமதியின்றி நீண்டகால விடுப்பு: 13,521 ரயில்வே ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவு
Updated on
1 min read

எவ்வித அனுமதியும் இன்றி நீண்டகாலமாக விடுப்பு எடுத்த ரயில்வே ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 13,521 பேர் பணி நீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவின் பேரில், ரயில்வே உயரதிகாரிகள் நீண்ட காலமாக விடுப்பில் உள்ள ஊழியர்கள் பட்டியலை தயாரித்தனர். இவர்கள் அனைவரும் குரூப் சி மற்றும் டி பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர்.

அதிகாரிகள் நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் ரயில்வே துறையில் உள்ள 13 லட்சம் ஊழியர்களில் 13,521 ஊழியர்கள் எவ்வித அனுமதியுமின்றி நீண்ட காலமாக விடுப்பில் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, ரயில்வே துறை சட்டதிட்டங்களின்படி இந்த ஊழியர்கள் அணைவரும் பணி நீக்கம் செய்யப்படுவதான நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளதாக ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in