

பெண் ஊழியர்களுக்கான பணிச்சூழலை மேம்படுத்தும் பொருட்டு குழந்தைகள் காப்பகம் ஒன்று நாடாளுமன்ற வளாகத்திலேயே அமைக்கப்படவுள்ளது.
நாடாளுமன்றத்தில் வேலை செய்யும் பெண் ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை பார்த்துக் கொள்ள வசதியாக 1,500 சதுர அடியில் க்ரெஷ் எனப்படுகிற குழந்தைகள் காப்பகம் அமைக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
குழந்தைகளின் வளர்ச்சியை மேம்படுத்தும் வண்ணம், தொழில்முறை அனுபவம் பெற்றவர்களால் இந்த காப்பகம் நிர்வகிக்கப்படும். இந்த காப்பக்கத்திலேயே குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கவும் தனி அறை ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேலை தொடங்கப்பட்டுள்ளது. மூத்த நிர்வாகிகள் மேற்பார்வையிட லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மஹாஜனின் நேரடி கண்காணிப்பில் வேலைகள் நடக்கும்.
அரசாங்கத்தின் இந்த முயற்சி மற்ற தனியார் நிறுவனங்கள், மத்திய அரசு மற்றும் மாநில அரசு அலுவலங்களில் இந்த வசதியை கொண்டுவர ஊக்குவிக்கும் என அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்படுள்ளது.