

புதுடெல்லி: கடந்த 18-ம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் பிப்ரவரி மாத இறுதிக்குள் தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதையடுத்து கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்துக்கு தினமும் ஆயிரம் கன அடிக்கும்குறைவான நீரை திறந்துவிட்டுள்ளது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் 28-வது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் டெல்லியில் பிப்ரவரி 1-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில், பங்கேற்குமாறு கர்நாடகம், தமிழகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை செயலாளர்கள், காவிரி தொழில்நுட்ப குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழக அரசின் தரப்பில் ஜனவரி மாதம் வரைநிலுவையில் உள்ள 90.532 டிஎம்சி நீரை திறக்க வலியுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.