Published : 12 Feb 2018 02:35 PM
Last Updated : 12 Feb 2018 02:35 PM

குடிசைகளில் தங்கி நகர்ப்புற ஏழை மக்களிடம் எடியூரப்பா பிரச்சாரம்

கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் பாஜக தலைவர் எடியூரப்பா, பெங்களூருவில் உள்ள லஷ்மணபுரி குடிசைப் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ டிரைவர் வீட்டில் ஒரு இரவு முழுவதும் தங்கினார்.

பாஜகவின் 'ஸ்லம் வாஸ்தவ்யா' திட்டத்தின் ஒரு பகுதியென இது குறிப்பிடப்படுகிறது.

கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் தொடங்கி சில வாரங்களே ஆன நிலையில், ராகுல் காந்தி கோயில்களுக்குச் சென்று வழிபடுவதும், பாஜக தலைவர்கள் சேரிகளில் தங்கி பிரச்சாரம் செய்வதுமாக கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் வழக்கம்போல புதுப்புது உத்திகள் கையாளப்பட்டு வருகின்றன.

பாஜகவின் தேர்தல் பிரச்சாரம் நகர்ப்புற ஏழைகளுக்குச் சென்றடைய வேண்டுமென பாஜக திட்டமிட்டுள்ளது. அத்திட்டம் 'ஸ்லம் வாஸ்தவ்யா' என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சனிக்கிழமை கர்நாடகா மாநிலம் முழுவதும் சேரிகளில் இரவுகளில் தங்கி பிரச்சாரப் பணிகளை செய்தனர்.

மூத்த தலைவர்கள் ஜகதீஷ் ஷெட்டர் மற்றும் கே. ஈஸ்வரப்பா முறையே ஹபுபாலியில் மற்றும் ஷிவாமோக்கில் சேரிகளில் தூங்கினார்கள். பாஜகவின் மாநிலச் செயலாளர் ஷோபா கரண்ட்லாஜே எம்.பி. கயாத்தமாரணஹள்ளியில் தங்கினார்.

காந்திநகரில் லக்ஷ்மணபுரி சேரியில் உள்ள ஆட்டோ டிரைவர் வீட்டிற்கு வந்த எடியூரப்பா அங்கு இரவு பகலாக தங்கியிருந்து குடிசைவாசிகளுடன் ஒரு சந்திப்பு நடத்தினார். முனிராஜ், வீட்டு உரிமையாளர், எடியூரப்பா தங்களுடன் இரவு உணவு சாப்பிடவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.

பாஜக மாநிலப் பிரிவு தலைவர் பி.எஸ். எடியூரப்பா பெங்களூரில் தனது குடிசை பிரச்சாரத்தில், ''பாஜக ஆட்சிக் காலத்தில், மாநிலம் முழுவதும் சேரிவாசிகளுக்கு நிறைய நலத்திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டன. அவர்களுக்காக ஆயிரக்கணக்கான வீடுகளை கட்டித் தரப்பட்டன. ஆனால் இந்தத் துறை காங்கிரஸ் ஆட்சியின் போது முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது'' என்று கூறினார்.

காங்கிரஸ் அரசாங்கத்தின் சமூக நலத் திட்டமான இந்திரா கேண்டீன் மூலமாக நகர்ப்புற ஏழை மக்கள்மீது வெளிச்சம் படர்ந்தது. ஆனால் காங்கிரஸ் திட்டங்களை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. சித்தராமமையா அரசாங்கத்தால் முடுக்கிவிடப்பட்ட பாக்யா திட்டங்களை விமர்சித்து, 'ஸ்லம் துர்பாக்யா' (குடிசை துரதிர்ஷ்டம்) என்று அழைக்கப்படும் மாநிலத்தின் குடிசைகளைப் பற்றி சமூக-பொருளாதார ஆய்வறிக்கையை பாஜக வெளியிட்டது.

அந்த ஆய்வறிக்கையில், பெரும்பாலான சேரிகளில் பொது கழிப்பறைகள் இல்லை. பள்ளிகள், அங்கன்வாடிகளில் போதுமான தண்ணீர் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 40.5 லட்சம் மக்கள் கொண்ட 2,804 சேரிகளில் 976 சேரிகளில் மட்டும இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இதே ஆய்வில் 976 சேரிகளில் பாஜகவுக்கு ஆதரவாக 450 பேர், காங்கிரஸுக்கு ஆதரவாக 402 பேர், ஜனதா தளம் (எஸ்) 210, இதர பிரிவுக்கு 110 பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்தராமையா ட்வீட்

இதற்கிடையில், முதல்வர் சித்தராமையா செய்த ட்வீட்டில் , "இது ஒரு தேர்தல் ஸ்டண்ட் என்றாலும் இதை நான் வரவேற்கிறேன். குறைந்தபட்சம் இதிலிருந்தாவது பாஜக பாடம் கற்றுக்கொள்கிறதே என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுள்ளது. அதேநேரம் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மாநிலத்தில் எஸ்/எஸ்டிக்களுக்காக துணைத் திட்டங்களாக என்னென்ன திட்டங்கள் இவர்களிடம் உள்ளன?'' என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x