Published : 14 Feb 2018 05:57 PM
Last Updated : 14 Feb 2018 05:57 PM

மோடி, உங்களுக்கு யாரேனும் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருக்கிறார்களா?- ஜிக்னேஷ் மேவானி கிண்டல்

 

பிரதமர் மோடி உங்களுக்கு யாரேனும் ஐ லவ் யூ கூறியிருக்கிறார்களா?. என குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி கிண்டல் செய்துள்ளார்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காதலர் தினம் கொண்டாடக்கூடாது, அது இந்தியாவின் கலாச்சாரம் இல்லை, பாரம்பரியம் இல்லை எனக் கூறி பஜ்ரங்தள், இந்து சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சில மாநிலங்களில் காதலர்களை தாக்கியும், அவர்களை அவமானப்படுத்தியும் இந்து அமைப்புகள் செய்கின்றனர்.

இந்நிலையில், குஜராத் மாநில சுயேட்சை எம்எல்ஏவும், தலித் அமைப்பின் தலைவரான ஜிக்னேஷ் மேவானி ட்விட்டரில் காதலர் தினமான இன்று பதிவு வெளியிட்டுள்ளார்.

அதில், “பிரதமர் மோடிக்கு இதுவரை யாரேனும் ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்களா? எனக்கு சந்தேகமாக இருக்கிறது. ஆனால், ஏராளமானோர் எனக்கு ஐ லவ் யு சொல்லி இருக்கிறார்கள்”எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டில் அவர் கூறுகையில், “ இந்தியர்கள் எப்போதும் வெறுப்புணர்வைக் காட்டிலும், அன்பு செலுத்துவதையே அதிகமாக விரும்புவார்கள். மலையாளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் ‘மணிக்கிய மலரய பூவே’பாடல்தான் காதலர் தினத்தில் போராட்டம் நடத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் மற்ற அமைப்புகளைச் சார்ந்தவர்களுக்கும் பதிலாக இருக்கும். இந்தியர்கள் எப்போதும் வெறுப்பைக் காட்டிலும் அன்பைத்தான் விரும்புவோம் என்பதை நிரூபித்து வருகிறார்கள். இந்த அழகான வீடியோவை பார்த்து ரசியுங்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த ஆண்டும் காதலர்களை தொந்தரவு செய்யத் தவறவில்லை. கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் தொந்தரவு அளித்து வருகின்றனர்.

ஐதராபாத், நாக்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் காதலர்களைத் தாக்கியும், அவர்களை துன்புறுத்தியும் இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். சென்னையில் கழுதைக்கும், நாய்க்கும் திருமணம் செய்து வைத்து இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x