ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்
Updated on
1 min read

சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து 127 நாட்கள் பயணித்து பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 எனும் லெக்ராஞ்சியன் புள்ளியை மையமாக கொண்ட சுற்றுப் பாதையில் ஜன. 6-ம் தேதி நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் சென்சார் பாகங்கள் வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில், ‘விண்வெளியில் காந்தப்புலத்தை அறிவதற்காக பொருத்தப்பட்டிருந்த 6 மீட்டர் மேக்னடோ மீட்டர் தற்போது வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இந்த கருவிசூரியன் மற்றும் இதர கிரகங்களின் காந்தப்புலத்தை அளவிடும். அதன்படி, 132 நாட்களாக இயக்கப்படாமல் இருந்த மேக்னடோமீட்டரின் ஆண்டனாக்கள் ஜன.11-ம் தேதி முதல் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இதிலுள்ள 2 சென்சார்களும் நல்லநிலையில் ஆய்வை தொடர்கின்றன’ என்று கூறப்பட்டுள்ளது.

இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம் அடுத்த5 ஆண்டுகள் வரை சூரியனின்செயல்பாடுகளை கண்காணித்து ஆராயும் என்பது குறிப்பிடத்தக் கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in