ஜீன்ஸும் செல்பேசியும் பெண்களின் அடிப்படை உரிமை: ஹரியாணா பஞ்சாயத்து தலைவர் கருத்து

ஜீன்ஸும் செல்பேசியும் பெண்களின் அடிப்படை உரிமை: ஹரியாணா பஞ்சாயத்து தலைவர் கருத்து
Updated on
1 min read

பெண்கள் ஜீன்ஸ் அணியக் கூடாது, செல்போன் பயன்ப்படுத்த கூடாது என்று பஞ்சாயத்துகள் தீர்ப்பு வழங்குவது தவறு என்றும் அவை பெண்களின் அடிப்படை உரிமைகளை கொலை செய்யும் நடவடிக்கை என்றும் ஹரியாணா பஞ்சாயத்து தெரிவித்துள்ளது.

ஹரியாணாவில் கண்டேலா பஞ்சாயத்தில் இது தொடர்பாக கூறும்போது, " ஊர் பஞ்சாயத்துகளில் பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது, செல்போன் பயன்ப்படுத்தக் கூடாது என்று தேவையில்லா விஷயங்களுக்கு தடை விதிப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவை அவர்களின் அடிப்படை உரிமை, தடை என்ற பெயரில் மக்களின் அடிப்படை உரிமைகளை கொலை செய்யக் கூடாது. எந்த உடை அணியலாம் என்பதை, ஒரு தனி நபர் தீர்மானித்துக்கொள்ளலாம். ஆனால் நாம் எந்த சமூகத்தில் இருக்கிறோம். அவை நமது சமுதாயத்திற்கு ஏற்றதா? என்பதை மட்டும் மனதில் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டது.

முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று, உத்திரப் பிரதேசத்தில் குஜ்ஜார் சமூக பஞ்சாயத்தில், பெண்கள் ஜீன்ஸ் அணியவும் செல்போன் பயன்ப்படுத்தவும் தடை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் ஜத்வாத் என்ற ஊர் பஞ்சாயத்திலும் இதே போன்ற தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in