

அயோத்தி: கடவுள் விஷ்ணுவின் வாகனம் கருடன் என இந்து புராணங்கள் கூறுகின்றன. விஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்றான ராமருக்காக அயோத்தியில் கட்டப்பட்டுள்ள கோயில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அப்போது கோயிலின் மேல் பகுதியில் கருடன் வட்டமிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் கடவுளின் ஆசிகிடைத்திருக்கிறது என்று பக்தர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடவுள் ராமர் அங்குதான் இருக்கிறார் என்பதற்கான அறிகுறி இது என்றும் நம்பப்படுகிறது.
பக்தி மற்றும் ஆன்மிக உணர்வால் வளிமண்டலம் சூழ்ந்துள்ளதால், இது நல்ல அதிர்ஷ்டத்தின் அறிகுறியாகவும், கோயிலின் எதிர்காலத்திற்கான நேர்மறையான சகுனமாகவும் இருக்கிறது என கருதப்படுகிறது.