

ஹரியாணாவின் பஞ்சகுலா மாவட்டத்திலிருக்கும் புகழ்பெற்ற சாகேத்ரி சிவன் கோயிலில் ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பிப்ரவரி 18 நள்ளிரவு இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. முழு கொள்ளையும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. ஹரியாணா போலீஸ் இந்த சம்ப்வத்தை விசாரித்து வருகிறது.கோயில் பூட்டுகளை உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்றுவிட்டார்கள் என கோயில் பூசாரி தெரிவித்துள்ளார்.
தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் இந்தக் கோயிலில் பிப்ரவரி 13-14ஆம் தேதிகளில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அதே தினம், பல லட்சம் ரூபாய்கள் காணிக்கையாகவும் வந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கோயில் பொறுப்பாளர்கள். அந்தப் பணத்தை ஏற்கனவே வங்கியில் சேர்த்து விட்டனர். பின்னர் கோயிலுக்கு வழங்கப்பட்ட காணிக்கை கோயில் வளாகத்திலேயே இருந்துள்ளது. அதுதான் தற்போது கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.