

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பெருவாரியான வெற்றிக்கு, பாஜகவினரின் கடின உழைப்போடு, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல்களும் காரணம் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் சுதந்திர தினத்தையொட்டி தேசியக் கொடி ஏற்றிய அத்வானி, செய்தி யாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
கடந்த 1952-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அனைத்து தேர்தல் களையும் நான் பார்த்துள்ளேன். இதில், 2014-ம் ஆண்டு தேர்தல் முடிவு எமது கட்சிக்கு முன்னெப் போதும் நிகழ்ந்திராத ஒன்று. இந்த வெற்றியில் பெரும்பான் மையான பங்கு எங்களை எதிர்த் துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி யினரையே சேரும் என்பதை நான் மறுக்கவில்லை. அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் இதுவரை சந்திக்காத ஊழல்களையும், தவறுகளையும் செய்யாமல் இருந்திருந்தால், இதுபோன்ற முடிவுகள் ஏற்பட்டிருக்காது.
நரேந்திர மோடி தலைமையில் நடந்த தீவிர தேர்தல் பிரச்சாரமும் வெற்றிக்கு காரணம். சுதந்திர தின உரையை மோடி எழுதிவைத்து வாசிக்கவில்லை. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் என்று அவர் கூறினார்.