Published : 17 Jan 2024 06:48 AM
Last Updated : 17 Jan 2024 06:48 AM
புதுடெல்லி: மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது.செவ்வாய்க்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 180 பேர் புதிதாக கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இருப்பினும், தற்போது கரோனா தொற்றுக்காக சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 2,804 ஆக குறைந்துள்ளது. மகாராஷ்டிராவில் கரோனாக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
2023 டிசம்பர் 5-ம் தேதி வரை தினசரி கரோனா பாதிப்பு இரட்டை இலக்கமாக குறைந்து காணப்பட்டது. ஆனால், தற்போது குளிர் காலம் காரணமாக அதன் பாதிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, டிசம்பர் 31-ல் அதிகபட்சமாக தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 841-ஆக அதிகரித்தது. கரோனா பாதிப்புக்குள்ளானவர்களில் 92% பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகின்றனர். ஜேஎன்.1 திரிபு வைரஸ் உயிரிழப்பு ஏற்படும் அளவுக்கு வீரியம் கொண்டதாக இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT