இந்தியா
கோவா மாநில கிராமங்களில் ஹெச்.ஐ.வி. பாதிப்பு
கோவாவின் ஒவ்வொரு கிராமத் திலும் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப் பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவா சட்ட மன்றத்தில் அவர் கூறியதாவது: கோவாவில் தற்போது சுமார் 15,000 மக்கள் ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாநில மக்கள் தொகையில் இது ஒரு சதவீதம் ஆகும். எனில், ஹெச்.ஐ.வி.பாதிப்பு இல்லாத ஒரு கிராமம் கூட கோவாவில் இல்லை என்பதுதான் பொருள்.
எனினும், கடந்த 2009ம் ஆண்டிலிருந்து ஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந் துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
