Published : 12 Jan 2024 05:58 AM
Last Updated : 12 Jan 2024 05:58 AM
புதுடெல்லி: ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிர்வு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் நேற்று மதியம் 2.50 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கு பகுதியில் 241 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவானது. எனினும் இதனால் பாதிப்பு ஏற்பட்டதாகவோ உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ தகவல் இல்லை.
இந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லி, காஷ்மீர் உள்ளிட்டவடமாநிலங்களில் நேற்று லேசான அதிர்வு உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். பாகிஸ்தானின் லாகூர், இஸ்லாமாபாத் உள்ளிட்டபகுதியிலும் லேசான அதிர்வு ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து 2-வது முறையாக ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிக்கும் அதிகமாக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT